தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் செய்முறைத் தேர்வு - +2 exam

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Practical EXAM Dates
செய்முறை தேர்வு

By

Published : Mar 30, 2022, 6:29 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி முதல் மே 28ஆம் தேதி வரை நடைபெறும் என அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. கரோனா பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளில் பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில், இந்தாண்டு பொதுத்தேர்வுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், '12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் பள்ளி மாணவர்களுக்கான பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகளை, ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

அனைத்து செய்முறைத் தேர்வுகளும் முடிவுற்ற பின்னர், மதிப்பெண் பட்டியல்களை தலைமையாசிரியர்கள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மே 4ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். அவற்றை முதன்மைக் கல்வி அலுவலர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், மே 10ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பழங்கால நடராஜர் சிலை மீட்பு

ABOUT THE AUTHOR

...view details