தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'மிக கவனமாக இருங்கள்' - சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் கரோனா எச்சரிக்கை!

சென்னை: பொதுமக்கள் வருங்காலங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் எனச் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வலியுறுத்தியுள்ளார்.

சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர்
சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர்

By

Published : Mar 18, 2021, 5:12 PM IST

சென்னை, திருவள்ளூர் போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்துவருவதால் சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள அத்திப்பட்டு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தை மருத்துவர்களுடன் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வுசெய்தார்.

தற்போது நாளுக்கு நாள் நோய்த்தொற்று அதிகரித்துவருவதால் முன்னேற்பாடுகள் குறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது:

மருத்துவமனைக்குச் சென்று நுரையீரல் போன்ற பாதிப்புகள் இல்லாமல் கரோனா நோய்த்தொற்று ஆரம்ப நிலையில் உள்ளவர்களை இங்கு வைத்து கவனிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கரோனா தொற்று அதிகரித்துவருவதால் பொதுமக்கள் கூட்டங்கள் அதிகமான மக்கள் கூடும் இடங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளைச் சுத்தப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

தற்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர் கரோனா ஏறுமுகத்தில் உள்ளதால் குறிப்பாக நேற்றைய தினத்தில் 56 குடும்பங்களில் நோய்த்தொற்று அதிகரித்திருப்பது தெரியவந்தது. பெருமளவில் தற்போது தொற்று இல்லை எனிலும் இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு குடும்பத்திலோ அல்லது பகுதியில் 3 நபருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறிந்தால் சம்பந்தப்பட்ட பகுதிகளைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு நோய்த்தொற்று அதிகரிப்பதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

பொதுமக்கள் வருங்காலங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். நோய்த்தொற்று ஏற்பட்டாலோ அல்லது அறிகுறிகள் தென்பட்டாலோ உடனடியாக மருத்துவமனை சென்று மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். அம்பத்தூர், அத்திப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள நான்கு பிளாக்கில் 4,580 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன, மருத்துவர்களுக்காக 110 அறைகள் தயாராக உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் கரோனாவை தடுக்க RT- PCR பரிசோதனையை அதிகரிக்க தலைமைச் செயலாளர் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details