தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குரூப் 1 முதனிலை தேர்வு முடிவுகள் வெளியீடு! - tnpsc

சென்னை: குரூப் 1 முதனிலைத் தேர்வின் முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

tn

By

Published : Apr 3, 2019, 7:15 PM IST

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,“தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் கொள்குறி வகைபோட்டித் தேர்வுகளில், தேர்வு நடைபெற்ற இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்யும் பொருட்டு, உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

தேர்வில் பங்குபெற்ற தேர்வர்கள் இதன் மூலம் தேர்வில் தாங்கள் சரியெனக் கருதி அளித்த விடைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். தேர்வர்கள் தேர்வாணையம் வெளியிட்ட உத்தேச விடைகளில், தாங்கள் தவறு எனக் கருதும் விடைகளை7 நாட்களுக்குள் தேர்வாணைய இணையதளத்திலேயே மறுப்புத் தெரிவித்து சரியான விடை எதுவெனக் குறிப்பிட்டு அதற்கான உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தேர்ந்த வல்லுநர் குழுவினால் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாளாகவே இருப்பினும், தேர்வர்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கென, தனித்தனியாக ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் 3 வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டு அவ்வல்லுநர் குழு, தேர்வர்கள் தவறெனக் குறிப்பிடும் விடைகள் அனைத்தையும் தீவிரமாகப் பரிசீலனை செய்து வல்லுநர்கள் சரியெனக் குறிப்பிடும் விடைகளைக் கொண்டு மட்டுமே தேர்வு விடைத்தாள்கள் மதிப்பிடும் பணி மேற்கொள்ளப்பட்டு, சரியான விடைகளுக்கு மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடைமுறை அனைத்து தேர்வுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதே நடைமுறை குரூப் 1-ல் அடங்கிய துணை ஆட்சியர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்டப் பதிவாளர், ஊரகவளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மாவட்ட அலுவலர் ஆகிய பதவிகளுக்கான 181 காலிப்பணியிடங்களுக்கு மார்ச் 3ஆம் தேதி அன்று நடைபெற்ற முதனிலைத் தேர்விலும் பின்பற்றப்பட்டுள்ளது.

அதில் கலந்து கொண்ட 1,68,549 விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கானவெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட 9,850 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல், முதனிலைத் தேர்வு நடைபெற்ற, ஒரு மாதகாலத்தில் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், முதன்மைத் தேர்வுகள் வருகின்ற 2019 ஜூலை 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. முதன்மைத் தேர்விற்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதார்கள் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தங்களது மூலச்சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.இதற்கான குறிப்பாணை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு தேர்வாளர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திமூலம் தகவல் தெரிவிக்கப்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details