சென்னை:நாடெங்கும் வரும் அக்.24 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசுகள் விற்பனை, பட்டாசுகள் வெடிப்பதற்காக கட்டுப்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து வரும் 28ஆம் தேதி தமிழக அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
தீபாவளி பண்டிகை வரும் அக்.24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள், தடை செய்யப்பட்ட சீன பட்டாசு விற்பனையை கண்காணிப்பது, பசுமைப் பட்டாசுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஆகியன குறித்து வரும் 28ஆம் தேதி அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.