தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'10% இட ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கக் கூடாது' - TN govt.

சென்னை: பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது சமூக நீதிக்கு எதிரானது என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.

doctors

By

Published : Jul 8, 2019, 7:31 AM IST

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் சங்கத்தில் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஏற்கனவே, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்திய தொகுப்பு இடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு
வழங்கப்படாமல் இருக்கும் நிலையில், பொதுப்பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அவசரம் காட்டுவது ஏன் என கேள்வியெழுப்பினார்.

செய்தியளார்களை சந்தித்த மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத்

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பொதுப்பிரிவைச் சேர்ந்த ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. இந்த 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு எதிரான செயலாகும்.

இதனால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாவர்கள் என்பதால் மத்திய அரசின் இந்த முடிவிற்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்காமல், 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

ABOUT THE AUTHOR

...view details