தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'தமிழ்நாடு போலீசாருக்கு வாரவிடுமுறை அளிக்க வேண்டும்' - திருநாவுக்கரசர் - tn govt

சென்னை: "காவல்துறையினருக்கு வாரவிடுமுறை அளிக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வரவேண்டும்" என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

thirunavukarasar

By

Published : Jul 8, 2019, 9:58 PM IST

சென்னை விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாடு முழுவதும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் ரயில்வே துறையை மத்திய அரசு, தன்னுடைய கட்டுபாட்டில்தான் வைத்திருக்க வேண்டும். அது தனியார் மயமாக்க கூடாது. ஆந்திராவில் ஜெகன் மோகன் அரசு, காவல்துறையினருக்கு வாரவிடுமுறை அளித்துள்ளது. அதேபோல தமிழ் நாடு அரசும் காவலர்களுக்கு வாரவிடுமுறை அளிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "மாவட்டம் தோறும் மாஜிஸ்திரேட், முன்சீப் நீதிபதிகளுக்கு தனி வாகனம் வழங்க, மத்திய-மாநில அரசுகள் நீதித் துறைக்கு நிதி ஒதுக்க வேண்டும். தமிழ்நாட்டில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தவறில்லை. ஆனால் பின்தங்கிய தலித் மக்களை அது எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்க வேண்டும்" என்றார்.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details