இது குறித்து வெளியிட்டுள்ள அரசாணையில், "கரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து சேவைகள், தனியார் பேருந்து சேவைகள் தடைசெய்யப்பட்டிருந்தன. இதனையடுத்து, செப்டம்பர் 7ஆம் தேதிமுதல் 60 விழுக்காடு பயணிகளுடன்அரசுப் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ள நிலையில், தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளில் 100 விழுக்காடு இருக்கைகளில் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.