இது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி மார்ச் 31ஆம் தேதி வரையில் மாநில அளவிலான ஊரடங்கு அமலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்கள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் மார்ச் 23ஆம் தேதி முதல், வாரத்தில் 6 நாள்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று அதிகளவில் பரவி வரும் நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு, சுயநிதி, நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் படிக்கும் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ். பார்மசி, நர்சிங், மருத்துவம் சார்ந்தப் படிப்புகள் நேரடியாக நடைபெறுகின்றன. அதனை ஆன்லைன் மூலம் நடத்தலாம்.
மேலும் தற்போது நடைபெற்று வரும் தேர்வுகள், செய்முறைத் தேர்வுகளை மார்ச் 31ஆம் தேதிக்குள் கட்டயாம் முடிக்க வேண்டும், கல்லூரி விடுதிகளை இறுதியாண்டில் படிக்கும் அனைத்து இளங்கலை மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், முதுகலை மருத்துவ மாணவர்களுக்காக திறந்து செயல்படுத்தலாம். இதில், கரோனா பாதுகாப்பு நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ’தடுப்பூசி பாதுகாப்பானதே’ - மருத்துவர்கள் சைக்கிள் பேரணி