மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இரண்டு நாட்கள் சந்தித்துப் பேசினர். இதனையடுத்து சீன அதிபர் நேபாளத்திற்கும், மோடி டெல்லிக்கும் சென்றனர். இதில் மோடியை சென்னை விமான நிலையத்தில் இருந்து வழியனுப்ப வந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னண் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய பொன்.ராதாகிருஷ்னண், 'பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு இரண்டு நாள் நிகழ்ச்சிகளை சிறப்பாக தமிழ்நாடு அரசு செய்திருந்தார்கள். அதற்கான நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். தமிழகம் உபசரிப்பில் முன்னிலையில் இருப்பதை மீண்டும் மீண்டும் உறுதி படுத்தும் விதத்தில் உலகத்தலைவர்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி இங்கு கொண்டு வந்துள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு நடவடிக்கையிலும் தமிழகத்தின் பெருமையை எடுத்துக்காட்டும் விதமாக செயல்பட்டு வருகிறார்.