தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அடங்கும்.
சனிக்கிழமையும் இறைச்சிக்கடைகள் செயல்பட தடை- தமிழ்நாடு அரசு உத்தரவு! - இறைச்சிக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை: சனிக்கிழமையும் இறைச்சிக் கடைகள் செயல்படுவதற்குத் தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
![சனிக்கிழமையும் இறைச்சிக்கடைகள் செயல்பட தடை- தமிழ்நாடு அரசு உத்தரவு! Tn govt](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:46:25:1619450185-tn-che-07-tnorder-7209106-26042021204303-2604f-1619449983-685.jpeg)
Tn govt
இந்நிலையில், நேற்று (ஏப்.25) முதல் ஞாயிறு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால், கடந்த சனிக்கிழமை (ஏப்.24) அன்று பொது மக்கள் அதிகளவில் இறைச்சிக்கடைகளில் கூடினர். இதனால் தொற்று பரவும் அபாயம் நிலவியது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இறைச்சிக்கடைகளையும் சனிக்கிழமைகளில் மூட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வருகின்ற மே 1ஆம் தேதி மற்றும் இனி அனைத்து சனிக்கிழமையும்(சனி, ஞாயிறு இரண்டு நாளும்) மீன், கோழி, கறிக்கடைகள் இயங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.