சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவர், குடும்ப உறுப்பினரின் கைரேகை பயோமெட்ரிக் கருவியில் பதிவு செய்யப்பட்டு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுகின்றன.
சில நேரங்களில் இந்த கைரேகை பதிவு செய்யும்போது அந்த இயந்திரத்தில் கோளாறு ஏற்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருள்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.