விவேக் உடலுக்கு காவல் துறை மரியாதை - vivek
13:02 April 17
மறைந்த பத்மஸ்ரீ விவேக்கிற்கு காவல்துறை மரியாதை வேண்டி தமிழ்நாடு அரசு சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கவைக்கப்பட்டிருந்த நிலையில் அனுமதி கிடைத்த நிலையில் அவரது உடலுக்கு காவல் துறை மரியாதை செய்யப்படவுள்ளது.
மறைந்த நடிகர் விவேக்கிற்கு காவல் துறை மரியாதை அளிப்பதற்காக தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. கரோனா காரணமாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதாலும் கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் கோரிக்கையைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல் துறை மரியாதை செலுத்தப்படவுள்ளது.