சென்னை: ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மற்றும் பென்னாத்தூர் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் சுற்றுச் சுவர்களும் ரூ.92 இலட்சம் மதிப்பீட்டில் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சட்டப் பேரவை
முன்னதாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், 08.09.2021 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில், 2021-22ஆம் ஆண்டிற்கான திருத்திய வரவு செலவு கூட்டத்தொடரில், இத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தில் உரையாற்றி இருந்தார்.
அப்போது, “தஞ்சாவூர் மாவட்டம், கண்ணந்தங்குடி, மேலையூர் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் சுற்றுச்சுவரும், வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மற்றும் பென்னாத்தூர் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் சுற்றுச் சுவர்களும் ரூ.92 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்” என்றும் அறிவித்திருந்தார்.