தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மகாத்மா காந்தி சிலைக்கு ஆளுநர், முதலமைச்சர் மலர்தூவி மரியாதை - CM MK Stalin pays floral tribute

மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தி சிலை, ஆளுநர் ஆர் என் ரவி, mahatma gandhi, CM MK Stalin pays floral tribute, முதலமைச்சர் மலர்தூவி மரியாதை
CM MK Stalin pays floral tribute

By

Published : Oct 2, 2021, 11:29 AM IST

சென்னை: மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

அதனையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணல் காந்தியடிகளின் சிலைக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தி சிலைக்கு ஆளுநர், முதலமைச்சர் மலர்தூவி மரியாதை

இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள், காந்திய சிந்தனையாளர்கள் தேசபக்தி பாடலை பாடியும் , நூர்பு வேள்வி செய்தும், காந்தியடிகளின் நினைவை போற்றினர். காந்தியடிகளின் பிறந்தநாளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டிருந்தார்.

மகாத்மா காந்தி சிலைக்கு ஆளுநர், முதலமைச்சர் மலர்தூவி மரியாதை

அதில், "அகிம்சை - சகோதரத்துவம் என மானுட சமுதாயத்திற்கு இன்றியமையாத பண்புகளை வாழ்வின் நெறியாகக் கொண்டு வாழ்ந்து நமக்குக் கற்பித்த மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள்! தேசத் தந்தை காட்டிய நல்வழியில் நாமும் நாடும் நடைபோடுவதே இன்றைக்கும் என்றைக்கும் தேவையாகும்! சகோதரத்துவத்தை வளர்ப்போம்!" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:அன்றும், இன்றும், என்றும் கிங் மேக்கர் 'காமராஜர்'

ABOUT THE AUTHOR

...view details