தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ராஜ்பவனில் விரிவுரைக் கருத்தரங்கு: பங்கேற்கும் பேராசிரியர்கள் விவரங்களை அனுப்ப உத்தரவு - சென்னனை செய்திகள்

ஆளுநர் மாளிகையில் ராஜ்பவன் விரிவுரை கருத்தரங்கு நடக்கும் கருத்தரங்கில் பங்கேற்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பட்டியலைத் தயார்செய்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி

By

Published : Dec 4, 2021, 11:53 AM IST

சென்னை:தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் ராஜ்பவன் விரிவுரை கருத்தரங்கு நடத்தப்பட்ட உள்ளதாகவும், அதற்குப் பல்கலைக்கழகத்திலிருந்து தகுதியான பேராசிரியர்கள் பட்டியலை முழு விவரத்துடன் அனுப்ப வேண்டும் எனக் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மாணவர்களுக்கு தரமான கல்வி

தமிழ்நாடு ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இருந்தபோது கல்லூரி மாணவர்களை அழைத்து கருத்தரங்குகள் நடத்தியிருக்கிறார். தற்போது தமிழ்நாடு ஆளுநராக உள்ள ஆர்.என். ரவி கல்வித் துறையில் முன்னேற்றம் அடைவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டுவருகிறார்.

தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என். ரவி தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், அரசின் முதன்மைச் செயலாளர்கள் உடன் அக்டோபர் 30ஆம் தேதி, உயர் கல்வியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கவும்; தரமான கல்வி, மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களுடன் உரை

மேலும், ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், தரமான ஆசிரியர்களைத் தேர்வுசெய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தார். மேலும், பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடியைத் தவிர்க்கத் தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் எனவும், அறிவுறுத்தி இருந்தார்.

நவம்பர் 23ஆம் தேதி, மாநிலத்திலுள்ள அனைத்து ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துரையாடினார். அதேபோல், சென்னையிலுள்ள தனியார்ப் பள்ளி மாணவர்களை ராஜ்பவன் வரவைத்தும் கலந்துரையாடினார்.

ராஜ்பவன் விரிவுரை கருத்தரங்கு

இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் மாளிகையிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் ராஜ்பவனில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் 'ராஜ் பவன் விரிவுரை கருத்தரங்கு' தொடங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்பவர்களைத் தமிழ்நாடு ஆளுநர் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வுசெய்வார். மேலும் இந்தக் கருத்தரங்கில் பேச விரும்பும் கருத்துகள், பேராசிரியர்களின் விவரங்களைப் பல்கலைக்கழகங்கள் அனுப்பிவைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை பிர்லா கோளரங்கத்தில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளின் மாணவர்கள் பார்வையிட்டனர்

இதையும் படிங்க: உண்டு உறைவிடப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்ட நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details