கோயம்புத்தூர்: யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி யானைகள் நல ஆர்வலரான முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதிகள் சஞ்ஜீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அமர்வில் நடைபெற்றது.
அப்போது தமிழ்நாடு அரசு, "நீலகிரி வனப்பகுதியில் யானைகளின் வழித்தடம், வாழ்விடத்தைக் கண்டறிதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்டவை குறித்து சர்வதேச அளவிலான நிபுணர்கள், உலக வனவிலங்கு நிதியம் ஆகியவற்றுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.