தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உண்டி உறைவிடப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்ட நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி

39 உண்டி உறைவிடப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, 45 உண்டி உறைவிடப் பள்ளிகளில் சுற்றுச்சுவர் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளுக்கு ரூ. 21.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தலைமைச் செயலகம், TN ASSEMBLY, TN GOVERNMENT RELEASES FUNDS FOR CLASSROOMS IN BOARDING SCHOOLS, TN TRIBE WELFARE BOARD, BOARDING SCHOOLS UNDER TRIBE WELFARE BOARD, TN GOVERNMENT PASSED GO, Adi Dravidar Welfare, Hill Tribes and Bonded Labour Welfare Minister Kayalvizhi, உண்டி உறைவிடப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு, தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு, அரசாணை வெளியீடு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, பழங்குடியினர் நலத்துறையின்கீழ் உள்ள உண்டி உறைவிடப் பள்ளிகள்
TN Government releases funds to build additional classrooms in boarding schools

By

Published : Dec 4, 2021, 8:11 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021-22ஆம் ஆண்டிற்கான திருத்திய வரவு செலவு கூட்டத்தொடரில் ஆதிதிராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன் அமைச்சர் கயல்விழி, அத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது அறிவித்ததாவது, “பழங்குடியினர் நலத்துறையின்கீழ் 318 உண்டி உறைவிடப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இதில், தர்மபுரி, ஈரோடு, சேலம், திருச்சி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 14 தொடக்கப்பள்ளிகள், 11 நடுநிலைப்பள்ளிகள், ஐந்து உயர்நிலைப் பள்ளிகள், ஒன்பது மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 39 உண்டி உறைவிடப் பள்ளிகளில் ரூ. 15 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.

45 உண்டி உறைவிடப் பள்ளிகளில் ரூ. 6.13 கோடி செலவில் சுற்றுச்சுவர்களும் என மொத்தம் ரூ.21.13 கோடி செலவில் கட்டப்படும்” என்றார்.

அதனை நிறைவேற்றும் விதமாக, பழங்குடியினர் நலத்துறையின்கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 39 உண்டி உறைவிடப் பள்ளிகளில் 65 வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.14 கோடியே 95 லட்சம் மற்றும் 34 உண்டி உறைவிட பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ரூ.6 கோடியே 14 லட்சத்து 16 ஆயிரம் என மொத்தம் ரூ. 21 கோடியே 9 லட்சத்து 16 ஆயிரம் செலவில் வகுப்பறைகள், சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: SaveLIFE: சாணி பவுடர் தயாரிப்புத்தடை செய்ய தொழில் துறையுடன் இணைந்து நடவடிக்கை - மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details