தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது' - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் - பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

சென்னை: வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அரசு முழுவீச்சில் தயாராக உள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

minister udhyakumar
minister udhyakumar

By

Published : Nov 21, 2020, 4:39 PM IST

இது தொடர்பாக சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "வடகிழக்கு பருவமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் அரசு ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அரசு முழுவீச்சில் தயாராக உள்ளது.
மழை அதிகம் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள மாவட்டங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் மழை தேங்கும் இடங்கள் குறைந்துள்ள நிலையில், மழை பெய்து சாலையில் தேங்கி நின்றால் துரிதமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெள்ளம் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மாற்று இடங்களில் தங்க வைக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உள்பட 4713 தங்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

குளம், குட்டை, ஓடை போன்ற நீர் நிலைகளில் குளிக்க குழந்தைகளை பெற்றோர் அனுமதிக்கக் கூடாது. கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details