சென்னை:இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் நவம்பர் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு கோரிக்கைகள் வைத்துவந்தன.
தீபாவளிக்கு மறுநாள் தமிழ்நாடு முழுவதும் விடுமுறை - tn government declared holiday on november 5th
தமிழ்நாடு முழுவதும் தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைகளை ஏற்று, பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று தீபாவளியை மகிழ்வுடனும், பாதுகாப்புடனும் கொண்டாட ஏதுவாக நவ.5ஆம் அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவ.20ஆம் தேதி மூன்றாம் சனிக்கிழமை அன்று பணிநாளாக ஏற்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பள்ளிகளுக்கு விடுமுறை: மகிழ்ச்சியில் மாணவர்கள்