பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளைக் கண்காணிக்க தமிழ்நாடு முதன்மை வனப் பாதுகாவலர் தலைமையில் அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பசுமைத் தமிழ்நாடு இயக்கம்: தலைமை இயக்குனரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு - பசுமைத் தமிழ்நாடு இயக்கம்
தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
பசுமைத் தமிழ்நாடு இயக்கம்
வனப் பகுதிகளில் காடு வளர்ப்பு, வனப்பகுதிகளுக்கு வெளியே மரம் நடுதல், விவசாய நிலங்களில் விவசாயப் பயிர்களோடு வருமான வாய்ப்புகளை அதிகரிக்க மரம் வளர்த்தல், சமூக, பொது, தனியார் பங்களிப்போடு வளர்ந்துவரும் பல்லுயிர்ப் பெருக்கத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
இதையும் படிங்க:கேரள ஆளுநரின் உரை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது - அமைச்சர் துரைமுருகன்
TAGGED:
பசுமைத் தமிழ்நாடு இயக்கம்