தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு அரசு சினிமா விருதுகள் - அட்டகாசமான அப்டேட்! - கோலிவுட் தற்போதைய செய்தி

சென்னை: அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

TN Flim awards
TN Flim awards

By

Published : Feb 25, 2020, 12:41 PM IST

தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக திரைப்பட விருதுகள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகளுக்கு மட்டும் விருதுகள் வழங்க தற்போது விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. உறுப்பினர்/ செயலாளர், திரைப்படத்துறையினர் நலவாரியம் (முதல் தளம்), மாநில செய்தி நிலையம், கலைவாணர் அரங்க வளாகம், வாலாஜா சாலை, சென்னை - 600002 என்ற முகவரியில் இன்று முதல் ரூ.10 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை என்ற பெயரில் 100 ரூபாய் கேட்பு வரைவோலை (DD) இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, மார்ச் 27ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்கூட்டத்தில் வெடித்த ஈபிஎஸ் - ஓபிஎஸ் கோஷ்டி மோதல்

ABOUT THE AUTHOR

...view details