தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

2019 - 2020ஆம் ஆண்டிற்கு கூடுதல் நிதியாக 6,580 கோடி ஒதுக்கீடு - நிதி அமைச்சர் - நிதி அமைச்சர்

சென்னை: நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த 2019-2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக 6,580 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

budget
budget

By

Published : Jan 9, 2020, 5:59 PM IST

2019-2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில், மொத்தமாக 6 ஆயிரத்து 580 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு 1000 ரூபாய் ரொக்கப் பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கு 2,363 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை - கன்னியாகுமரி இடையே இரண்டு மின் தொடரமைப்பு அமைக்கும் திட்டத்துக்கு ஏற்கனவே 4,332 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 108 கோடி ரூபாயும், திண்டுக்கல், இராமநாதபுரம், நீலகிரி, திருப்பூர், விருதுநகர், நாமக்கல், திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஏற்கெனவே 3,266 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 90 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

குடிமராமத்து திட்டத்துக்கு கூடுதலாக 346 கோடியும், கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கிட பத்து கூட்டுறவு, இரண்டு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு 143 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நேஷனல், அமராவதி, என்.பி.கே.ஆர்.ஆர் ஆகிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தங்கள் பணியாளர்களுக்குச் சட்டப்படியான நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்கு 28 கோடி ரூபாய் முன்பணமாக அரசு அளித்திருந்த நிலையில், தற்போது கூடுதலாக 175 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 290 கோடி ரூபாய் அரசு ஒதுக்கியிருந்தது. தற்போது கூடுதலாக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துப் பணியாளர்களுக்கு நிலுவை ஊக்க ஊதியம், கருணைத் தொகை ஆகியவை வழங்க 206 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலைய ஓடுதளத்தை விரிவாக்கும் பணிகளுக்காக எடுக்கப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக 189 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘அதிமுகவுக்கு தில் இல்லை’ - வெளிநடப்பு செய்தபின் துரைமுருகன் காட்டம்!

ABOUT THE AUTHOR

...view details