சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்துவது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர் பழனிகுமார் தலைமையில் காணொலி காட்சி மூலமாக மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தேர்தல் நடத்தும் அலுவலர் அறைகளில் சிசிடிவி கட்டாயம் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அறைகளில் சிசிடிவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அலுவலர்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கெடுத்து, அறிவுரைகளை வழங்கினார்.
மேலும், இது தொடர்பான அறிவிப்பில்,
- வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் மற்றும் உடன் வருபவர்கள் முகக் கவசம் அணிந்து வெப்பமானி பரிசோதனை செய்து சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை கண்காணிக்க வேண்டும்.
- நகர்புற உள்ளாட்சித் தேர்தலை அமைதியாக நடத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
- தேர்தல் நடத்தை விதிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும்.
- தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அறைகளில் சிசிடிவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போக்குவரத்து விதிகளை மீறும் வகையில் விளம்பரம்: நடிகர் கார்த்தி மீது புகார்