தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446’

voters list
voters list

By

Published : Jan 20, 2021, 10:38 AM IST

Updated : Jan 20, 2021, 12:45 PM IST

10:37 January 20

சென்னை: தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி மாநிலத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 ஆகும்.

வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டார். அதன்படி மாநிலத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 ஆகும். அதில் ஆண்கள் 3 கோடியே 08 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேராவர். பெண்கள் 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பேர். மூன்றாம் பாலினத்தவர் 7 ஆயிரத்து 246 பேர் அடங்குவர்.

சென்னையின் மொத்த வாக்காளர்களில், ஆண்களை விட பெண்களே அதிகமுள்ளனர். அதன்படி, சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையான 40 லட்சத்து 57 ஆயிரத்து 360 பேரில், ஆண்கள் 19 லட்சத்து 95 ஆயிரத்து 581 பேரும், 20 லட்சத்து 60 ஆயிரத்து 698 பெண் வாக்காளர்களும், 1,081 மூன்றாம் பாலினத்தவரும் இருக்கின்றனர்.

அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களை கொண்ட தொகுதியான சோழிங்கநல்லூர் தொகுதியில் 6,94,845 வாக்காளர்களும், குறைந்த எண்ணிக்கை கொண்ட துறைமுகம் தொகுதியில் 1,76,272 வாக்காளர்களும் உள்ளனர்.

முன்னதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட திருத்தப்பணிகளுக்காக கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அதில் 21,82,120 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வாக்காளர் பட்டியலில் 21,39,395 விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டன. மேலும் இறப்பு, இடமாற்றம், போலி வாக்காளர்கள் உள்ளிட்ட காரணத்தால் 5,09,307 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: பணியிலிருந்த ஏா் இந்தியா ஊழியர் உயிரிழப்பு!

Last Updated : Jan 20, 2021, 12:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details