தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர்களுக்குக் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

By

Published : Feb 1, 2022, 9:50 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல் 19.02.2022 அன்று ஒரே கட்டமாக நடைபெறுமெனக் கடந்த வாரத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் இதற்கான ஆயத்தப் பணியில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் - அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு

மேலும் தமிழ்நாட்டில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர்களுக்குக் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யும்படி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்குக் குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: பங்குச்சந்தைக்கு 2022 பட்ஜெட் பலன் தருமா?

ABOUT THE AUTHOR

...view details