சென்னை:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்க வாய்ப்பா? என எழும் கேள்விக்கு வரும் 19ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விடை தெரியும். இக்கூட்டத்திற்திற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்க வாய்ப்பு? - TN EC announced
வருகின்ற புதன்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022, குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற புதன்கிழமை நடைபெற உள்ளது எனத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்கள், இதர 21 மாவட்டங்களில் நடைபெற்று முடிந்தது. தற்போது 2022-க்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு மாநில ஆணையம் வருகின்ற புதன்கிழமை ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.