நாடு முழுவதும் பிரத்யேக செய்தியாளர்களைக் கொண்டு, நொடிக்கு நொடி நிகழக்கூடிய செய்திகளை அதன் உண்மைத்தன்மை மாறாமல் வாசகர்களுக்கு எளிமையாக வழங்கிடும் இணைய செய்தி நிறுவனமாக ஈடிவி பாரத் இன்று தொடங்கப்பட்டுள்ளது. 29 மாநிலங்கள், 13 அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகள் என ஊடகத்துறையின் அடுத்த எல்லையாக ஈடிவி பாரத் நிறுவனம் திகழ இருக்கிறது.
ஈடிவி பாரத் தொடக்க விழாவிற்கு துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வாழ்த்து! - tamilnadu
சென்னை: ஊடகத்துறையில் நவீனத்தன்மையுடன் இந்தியாவின் 13 மொழிகளில் இன்று களமிறங்கியுள்ள ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நமது ஈடிவி பாரத் நிறுவனத்திற்கு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், “ஈடிவி தொலைக்காட்சி 30 ஆண்டுகளுக்கு முன்னாள் தொடங்கப்பட்டு பல்வேறு மொழிகளில் அதனுடைய பரிணாம வளர்ச்சியாக இன்றைய தினம் தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் இணையதளம் தொடங்குவதற்கு எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈடிவி நிறுவனம் நடுநிலையோடு அரசியல், வர்த்தகம், கல்வி போன்ற செய்திகளை வெளிக்கொண்டுவருவதில் சிறந்து விளங்குகிறது. அதேபோல், எதிர்காலத்தில் ஒளிமையமாக பிரகாசிப்பதற்கு என்னுடைய இதயப் பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.