மருத்துவ வல்லுநர் குழுவுடன் தலைமைச் செயலர், சுகாதார முதன்மைச் செயலர் ஆலோசனை! - Chief Secretary Rajiv Ranjan
சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் தமிழ்நாடு தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
![மருத்துவ வல்லுநர் குழுவுடன் தலைமைச் செயலர், சுகாதார முதன்மைச் செயலர் ஆலோசனை! rajiv ranjan and Health secretary](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11129355-312-11129355-1616508653340.jpg)
rajiv ranjan and Health secretary
சென்னை தலைமைச் செயலகத்தில், நடைபெற்ற இக்கூட்டத்தில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள், மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் அதிகரித்துவரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் மருத்துவ வல்லுநர் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.