இது குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் இன்று மேலும் 5,783 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 5 ஆயிரத்து 820 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 88 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் இன்று மேலும் 5,783 பேருக்கு கரோனா உறுதி
18:02 September 06
சென்னை: தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 6) மேலும் 5,783 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரத்து 480ஆக அதிகரித்துள்ளது. அதேபோல குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 4 ஆயிரத்து 186ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 836ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் அதிகபட்சமாக 85 ஆயிரத்து 974 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 84 ஆயிரத்து 34 நபர்களுக்கு புதிதாக பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்த 5 ஆயிரத்து 773 பேருக்கும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 10 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த கரோனா பாதிப்பு
- சென்னை - 1,41,654
- செங்கல்பட்டு - 28,311
- திருவள்ளூர் - 26,311
- காஞ்சிபுரம் - 18,311
- கோயம்புத்தூர் - 18,955
- மதுரை - 14,775
- விருதுநகர் - 13,251
- தேனி - 13,158
- கடலூர் -14,060
- சேலம் - 12,654
- தூத்துக்குடி - 11,738
- வேலூர் - 11,668
- திருவண்ணாமலை - 11,701
- ராணிப்பேட்டை - 11,315
- திருநெல்வேலி - 10,315
- கன்னியாகுமரி - 10,217
- திருச்சி - 8,123
- விழுப்புரம் - 8,395
- தஞ்சாவூர் - 7,450
- திண்டுக்கல் - 7,278
- கள்ளக்குறிச்சி - 6,965
- புதுக்கோட்டை - 6,680
- தென்காசி - 5,812
- ராமநாதபுரம் - 4,974
- சிவகங்கை - 4,256
- திருவாரூர் - 4,219
- ஈரோடு - 3,842
- திருப்பத்தூர் - 3,232
- திருப்பூர் - 3,459
- அரியலூர் - 3,070
- நாகப்பட்டினம் - 3,325
- நாமக்கல் - 2,614
- கிருஷ்ணகிரி - 2,561
- நீலகிரி - 1,897
- கரூர் - 1,845
- பெரம்பலூர் - 1,418
- தருமபுரி - 1,445
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 922
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 876
- ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க:ஒரே நாளில் கரோனாவுக்கு குட் பை சொன்ன 70 ஆயிரம் பேர்!