கரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று (ஆகஸ்ட் 13) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5ஆயிரத்து 835 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 810 பேரும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 25 பேர் ஆவர். இதுவரை தமிழ்நாட்டில், கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 355ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் ஏழாவது நாளாக ஆயிரத்துக்கும் கிழாக 989 பேருக்கு கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 13ஆயிரத்து 58ஆக உயர்ந்துள்ளது. இதில், 10 ஆயிரத்து 868 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று மட்டும் கரோனாவால் 119 பேர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5ஆயிரத்து 397ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 5ஆயிரத்து 146 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 61 ஆயிரத்து 459ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 65 ஆயிரத்து 560 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை 33 லட்சத்து 75 ஆயிரத்து 596 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களில் 53 ஆயிரத்து 499 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாநிலத்தில் 61 அரசு பரிசோதனை மையம், 73 தனியார் ஆய்வகங்கள் என 134 ஆய்வகங்கள் உள்ளன.
மாவட்ட வாரியாக பாதிப்பு
- சென்னை - 1,13,058
- செங்கல்பட்டு - 19,640
- திருவள்ளூர் - 18477
- காஞ்சிபுரம் - 13,085
- மதுரை - 12,515
- விருதுநகர் - 10849
- தூத்துக்குடி - 9730
- தேனி - 9122
- திருவண்ணாமலை - 8432
- வேலூர் - 7915
- ராணிப்பேட்டை - 7786
- கோயம்புத்தூர் - 7884
- திருநெல்வேலி - 7112
- கன்னியாகுமரி - 7050
- திருச்சிராப்பள்ளி - 5550
- கடலூர் - 5943
- சேலம் - 5344
- விழுப்புரம் - 4906
- கள்ளக்குறிச்சி - 4745
- தஞ்சாவூர் - 4561
- திண்டுக்கல் - 4386
- ராமநாதபுரம் - 3840
- புதுக்கோட்டை - 3662
- தென்காசி - 3632
- சிவகங்கை - 3203
- திருவாரூர் - 2146
- திருப்பத்தூர் - 1863
- கிருஷ்ணகிரி - 1539
- அரியலூர் - 1573
- நாகப்பட்டினம் - 1392
- திருப்பூர் - 1379
- ஈரோடு - 1206
- நாமக்கல் - 1112
- நீலகிரி - 996
- தருமபுரி - 934
- கரூர் - 928
- பெரம்பலூர் - 839
இதையும் படிங்க:கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எப்படி அடக்கம் செய்யப்படுகின்றன?