தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதலமைச்சர் மகாவீர் ஜெயந்தி வாழ்த்து - முதலமைச்சர் வாழ்த்துச் செய்தி

சென்னை: மகாவீரர் பிறந்த தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் 'மகாவீர் ஜெயந்தி' நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

Mahaveer jeyanthi 2020
TN CM wishes Mahaveer jeyanthi

By

Published : Apr 6, 2020, 12:46 PM IST

முதலமைச்சர் வெளியிட்டுள்ள 'மகாவீர் ஜெயந்தி' வாழ்த்துச் செய்தியில்,

பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த 'மகாவீர் ஜெயந்தி' நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அகிம்சையை அடிப்படையாக கொண்ட சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரராக விளங்கியவர் பகவான் மகாவீரர் . மூன்று ரத்தினங்கள் எனப்படும் நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை ஆகியவற்றை மக்களுக்கு போதித்ததோடு, பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையே அறம் என்றுரைத்து, வாய்மையைப் போற்றி, ஆசைகளைக் களைந்து, பற்றற்ற நிலையைக் கடைப்பிடித்து, அறநெறியை பின்பற்றி வாழ்ந்தார்.

இந்த இனிய நாளில், உலகில் அன்பும், அறநெறியும் தழைத்தோங்கிட மக்கள் அனைவரும் பகவான் மகாவீரரின் போதனைகளை மனதில் நிறுத்தி அன்பு வழியில், அறநெறி சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு. சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய 'மகாவீர் ஜெயந்தி' நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details