தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எஸ்.பி வேலுமணி மீதான ஊழல் புகாரில் நிச்சயம் நடவடிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின் - ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான ஊழல் புகாரில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin
stalin

By

Published : Nov 9, 2021, 11:53 AM IST

Updated : Nov 9, 2021, 1:17 PM IST

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கொட்டி தீர்த்த கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடானது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த இரண்டு நாள்களாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மூன்றாவது நாளாக ஆய்வு மேற்கொள்ளும் ஸ்டாலின்

அந்த வகையில், இன்றும் (நவம்பர் 9) மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஸ்டாலின் மூன்றாவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தன் சொந்த தொகுதியான கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, நிவாரண உதவிகளை ஸ்டாலின் வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறுகையில், "சென்னையில் ஸ்மார்ட் திட்ட பணிகள் முறையாக நடைபெறவில்லை. ஒன்றிய அரசிடம் இருந்து பெறப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை.

முதலமைச்சர் ஸ்டாலின்

கமிஷன் பெறப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது ஊழல் புகாரில் நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதே போல் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: இரு நாட்களுக்கு சென்னை வர வேண்டாம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Last Updated : Nov 9, 2021, 1:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details