தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘கழகத்திற்கு துரோகம் செய்யாதீர்’ -முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் - அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம்

சென்னை: அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கழகத்திற்கு துரோகம் செய்யாதீர்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்
முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

By

Published : Jan 22, 2021, 4:24 PM IST

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அமைச்சர்கள், அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பை பிரமாண்டமாக நடத்துவது, சட்டப்பேரவை தேர்தல் சூழல், சசிகலா சிறைவாசம் நிறைவடைந்து வெளியே வர உள்ளதால் அரசியல் தாக்கம் குறித்த விவகாரம், கூட்டணி பலம் எப்படி உள்ளது, வேறு எந்த சிறிய கட்சிகளை கூட்டணிக்கு அழைப்பது, மேலும் பாஜக தேசிய தலைவர் நட்டா 30ஆம் தேதி தமிழ்நாடு வரும்போது கூட்டணி குறித்து பேசுவது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம், அமைச்சர்கள் செங்கோட்டையன், கேசி வீரமணி, நிலோபர் கபில், சரோஜா, பொந்ஜமின், ராஜேந்திர பாலாஜி, வேலுமணி, தங்கமணி, உள்ளீட்ட முக்கிய நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதிமுகவின்மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம்

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தகூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசிகையில், “பெங்களூர் சிறையிலிருந்து வெளியேவரும் சசிகலாவிடம் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம். குறிப்பாக ஸ்டாலின், தினகரன் ஆகியோரிடம் யாரும் எந்த தொடர்பும் வைத்து, கழகத்திற்கு துரோகம்செய்யாதீர்கள். அடுத்து நாம்தான் ஆட்சி அமைப்போம் அதை மனதில் வைத்து தேர்தல் பணியாற்றுங்கள்” என்றார்.

இதையும் படிங்க...பேரறிவாளன் விடுதலை விவகாரம்: முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம்

ABOUT THE AUTHOR

...view details