தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி - முதலமைச்சர் பழனிசாமி - TN CM Palanisamy news in Tamil

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி என நேரு உள்விளையாட்டு அரங்கில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

TN CM Palanisamy thanked the PM for allocating
TN CM Palanisamy thanked the PM for allocating

By

Published : Feb 14, 2021, 3:02 PM IST

தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று (பிப். 14) ஒருநாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துள்ளார். இதில் சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரதமர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

முன்னதாக, விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர், “எனது அழைப்பை ஏற்று தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி. தமிழ்நாட்டிற்கு மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்ததற்கு பிரதமருக்கு நன்றி.

நேரு உள்விளையாட்டு அரங்கில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி

பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள் தமிழ்நாடு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிரதமர் மோடியின் நடவடிக்கையால் இந்தியாவில் கரோனா கட்டுக்குள் வந்துள்ளது. கரோனா தடுப்பூசியால் இந்தியாவிற்கு உலக அளவில் பாராட்டு கிடைத்து வருகிறது. தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி திட்டம் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டுவருகிறது” என்றார்.

இதையும் படிங்க...பாரத தேசத்தின் பாதுகாவலர் பிரதமர் மோடி - ஓபிஎஸ் புகழாரம்!

ABOUT THE AUTHOR

...view details