தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
மீண்டும் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 6) நண்பகல் 12.30 மணிக்கு மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களோடு அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்கிறார்.