தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தகவல் தொடர்பு கட்டமைப்பிற்கான வழித்தட உரிமை அனுமதிக்கான வலைதளம்: முதலமைச்சர் தொடங்கிவைப்பு! - Nivar Cyclone

சென்னை: தகவல் தொடர்பு கட்டமைப்பிற்கான வழித்தட உரிமை அனுமதியளிக்கும் https://row.tn.gov.in என்ற வலைதளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

cm
cm

By

Published : Nov 25, 2020, 6:41 PM IST

நாடெங்கும் தகவல் தொடர்பு சேவைகளுக்கான அலைபேசி கோபுரங்களை அமைப்பதை நெறிப்படுத்திடும் வகையில், மத்திய அரசு Indian Telegraph Right of Way Rules – 2016 என்ற வழித்தட உரிமை அனுமதியளிப்பதற்கான விதிகளை வெளியிட்டுள்ளது.

இவ்விதிகளின்படி, தமிழ்நாட்டில் தகவல் தொடர்பு அலைபேசி கோபுரங்களை அமைத்திட, அதற்கான வழித்தட உரிமைக்கான அனுமதியை விரைவாக அளித்திடும் வகையில், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் https://row.tn.gov.in என்ற ஒரு புதிய வலைதளத்தை உருவாக்கியுள்ளது.

இவ்வலைதளத்தின் மூலம், அலைபேசி கோபுரம், உள்கட்டமைப்பு வழங்கும் நிறுவனங்கள், வழித்தட உரிமை பெற்றிடத் தேவையான அனைத்து ஆவணங்களுடன் பதிவுசெய்திடவும், வழித்தட உரிமை அனுமதிக்கான விண்ணப்பத்தை இணையம் வழியாகத் தாக்கல் செய்திடவும் இயலும்.

இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலமாகவும், சென்னையைப் பொறுத்தவரை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் மூலமாகவும் பரிசீலிக்கப்பட்டு, உரிய விண்ணப்பக் கட்டணங்கள் செலுத்தப்பட்ட பின்னர், இணையம் வழியாகவே வழித்தட உரிமைக்கான அனுமதி வழங்கப்படும்.

மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வசதியும் இவ்வலைதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பத்தின் தற்போதைய நிலை பற்றி அந்நிறுவனங்கள் அறிந்துகொள்ள இயலும்.

மேலும், இவ்வலைதளத்தில் உள்ள குறைதீர்க்கும் பகுதி மூலம், விண்ணப்பம் சார்ந்த குறைகளை விரைந்து தீர்க்க இயல்வதுடன், அலைபேசி கோபுரம் மற்றும் உள்கட்டமைப்பு வழங்கும் நிறுவனங்கள் அரசை எளிதில் அணுகி, வழித்தட உரிமைக்கான அனுமதியை பெற்றிடவும், அதன் பயனாகத் தமிழ்நாட்டில் தகவல் தொடர்பு கட்டமைப்பை வலுப்படுத்திடவும் இயலும்.

இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலர் க. சண்முகம், தகவல் தொழில்நுட்பவியல் துறை கூடுதல் தலைமைச் செயலர் (முழு கூடுதல் பொறுப்பு) ஹன்ஸ் ராஜ் வர்மா, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) ரவிச்சந்திரன், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details