சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை அடுத்த வாணியம்பாடி பகுதியில் அம்மா மினி கிளினிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்து உரையாற்றினார்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் யார்?
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை அடுத்த வாணியம்பாடி பகுதியில் அம்மா மினி கிளினிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்து உரையாற்றினார்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் யார்?
அப்போது பேசிய அவர், "ஏழை எளிய மக்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே அதிமுக என்ற இயக்கத்தை தொடங்கியவர் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர். அதன் அடிப்படையிலேயே பல்வேறு திட்டங்களை மக்களுக்கு கொடுத்தவர் ஜெயலலிதா. இவர்கள் இருவருக்கும் வாரிசு இல்லை, மக்கள்தான் இவர்களின் வாரிசுகள்.
கிராமத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கும் தரமான மருத்துவச் சேவை கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயேதான் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று பாதிப்பு குறித்து மாவட்டந்தோறும் நேரில் சென்று ஆய்வு நடத்திவருகிறேன்.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கட்சியினரையும் சந்தித்து வேண்டுமென்றே அரசின் மீது குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். மக்களை நேரில் சந்தித்து அவர்களின் தேவையை அறிந்து நிறைவேற்றுவது பெரிதா? இல்லை காணொலி வாயிலாக தொண்டர்களைச் சந்திப்பது பெரிதா?
தன் குடும்பத்திற்காக சுயநலமாகச் செயல்படுபவர்கள் திமுகவினர். ஆனால் நாங்கள், மக்களின் குறிப்பறிந்து அவர்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றிவருகிறோம்” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வீரபாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் மனோன்மணி, சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்ட அதிமுகவினர், அரசு அலவலர்கள் கலந்துகொண்டனர்.