தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'தீபாவளியில் ஏற்றப்படும் ஒளி வாழ்வில் நிலைத்திருக்கட்டும்' ஓபிஎஸ்-இபிஎஸ்! - Deputy CM O. Panneerselvam

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

tn-cm-edappadi-palaniswami-and-deputy-cm-o-panneerselvam
tn-cm-edappadi-palaniswami-and-deputy-cm-o-panneerselvam

By

Published : Nov 12, 2020, 9:56 PM IST

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இல்லங்கள்தோறும் தீப ஒளி ஏற்றி, இருள் அகற்றி தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

தன்னலமும், அரக்க குணமும் கொண்டு அதிகாரம் செய்ய நினைப்போரைத் தண்டித்து, நியாயத்தையும், சமாதானத்தையும் நிலைநாட்டும் பண்டிகை தானே தீபாவளி. அதோபோல அடுத்த சில மாதங்களில் அதிகாரத்தை அழித்து அஇதிமுக ஆட்சி அமைக்கும். இந்தத் தீப ஒளித் திருநாளில் ஏற்றப்படும் ஒளி உங்கள் வாழ்வில் நிலைத்திருக்கட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:தீபாவளி பண்டிகை: முக்கிய கடைவீதிகளில் குவிந்த மக்கள்

ABOUT THE AUTHOR

...view details