தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் இன்று தனது 62ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அதிமுக கட்சியை சேர்ந்த எம்.பி, எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற எம்.சி.சம்பத்! - Minister MC Sampath birthday
சென்னை: தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தனது பிறந்தநாளான இன்று (ஜூலை 24) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பிறந்தநாளன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற எம்.சி.சம்பத்!
இந்நிலையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு இவர் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளோடும் சம்பத் வாழ வேண்டுமென்று முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.