அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. இதனால் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்தி தீர்ப்பை அனைத்து தரப்பும் மதிக்க வேண்டும் - முதலமைச்சர் வேண்டுகோள் - அயோத்தி வழக்கு தீர்ப்பு
சென்னை: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அனைத்து தரப்பும் மதிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எடப்பாடி
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அயோத்தி வழக்கில் வழங்கப்படவிருக்கும் தீர்ப்பு குறித்து, அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அனைத்து தரப்பும் மதிக்க வேண்டும்.
எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கும் தமிழ்நாடு மக்கள் இடம் கொடுக்கக்கூடாது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழச் செய்யவும், இந்தியாவிற்கே நமது மாநிலம் முன்னுதாரணமாகத் திகழவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.