சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், பெருநகர மாநகராட்சி ஆணையர், பொது சுகாதாரத்துறை இயக்குநர்களுக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், "ஒன்றிய அரசு ஒமைக்ரான் வைரஸ் தொற்று குறித்து அறிவுறுத்தியுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் நவம்பர் 24ஆம் தேதி கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தென் ஆப்ரிக்காவின் போட்ஸ்வானாவிலிருந்து பரவிய இந்த வைரஸ் தொற்று, பெல்ஜியம், ஹாங்காங், இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.
ஒமைக்ரான் வைரஸ் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, விமானப் பயணிகளுக்கு பரிசோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட வேண்டும்.