தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சாஸ்திரி, மாணவர்களுக்கு விண்ணப்பத்தினை வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தார்.
சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம் - சட்டக் கல்லூரி
சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சீர்மிகு சட்டப் பள்ளி மற்றும் பதினோரு அரசு சட்டக் கல்லூரியில் உள்ள 5 ஆண்டு சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் துவங்கியது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை குழுவின் செயலாளர் சங்கர் செய்தியாளரிடம் பேசுகையில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ள பி. ஏ. எல் .எல். பி , பி .பி. ஏ .எல் .எல். பி, பி. சி. ஏ. எல். எல் .பி, பிகாம் எல். எல்.பி. ஆகிய ஐந்து ஆண்டு சட்டப்படிப்பில் ஒவ்வொரு பிரிவுக்கும் 156 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 10 அரசு சட்டக் கல்லூரி மற்றும் தனியார் சட்டக் கல்லூரி ஆகியவற்றில் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கான 1411 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்களில் சேர்வதற்கு மாணவர்கள் ஆன்லைன் மூலமும் நேரிலும் விண்ணப்பங்களை பெற்று வரும் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 5 ஆண்டு சட்டப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள் பெறப்பட்டு முடிந்த பத்து நாட்கள் கழித்து தொடங்கும்.மாணவர்களுக்கு அரசாங்கத்தின் ரிசர்வேசன் அடிப்படையில் சரியான முறையில் சீட் வழங்கப்படும் என தெரிவித்தார்.