தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இலங்கையில் குண்டு வைத்ததாகக் கூறிய நபர் தலைமறைவு - இலங்கை

சென்னை: இலங்கையில் தான்தான் குண்டு வைத்ததாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய நபர் தலைமறைவானார்.

சென்னை

By

Published : Apr 26, 2019, 10:10 AM IST

ஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் தொடர் குண்டு வெடித்து 359 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதில், 450-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக பேசிய அடையாளம் தெரியாத நபர், 'இலங்கையில் நான் தான் குண்டு வைத்தேன். மேலும், கோயம்பேடு மேட்டுகுப்பம் பகுதியில் குண்டு வைத்துள்ளேன்; முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள்' என்று கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தொலைபேசியில் பேசிய அடையாளம் தெரியாத நபர் மைக்கேல் பிரீடியை என்றும், அவருக்கு வயது 43 எனவும் தெரியவந்தது. அவரை விசாரிக்க கோயம்பேட்டில் உள்ள அவரது வீட்டிற்கு காவல் துறையினர் சென்றபோது, மைக்கேல் கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு வரவில்லை எனவும், அவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்றும் மைக்கேல் மனைவி நவீனா கூறினார். இந்நிலையில், தலைமறைவாக உள்ள மைக்கேலே கோயம்பேடு காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details