தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”மதுரை விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி மதுரைக்கு சென்று, தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான நடராஜன், பெண் தாசில்தார் சம்பூரணம் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்துகிறார்.
கட்சி ஏஜெண்டுகள் 24 மணி நேரமும் தங்கலாம்: தலைமைத் தேர்தல் அலுவலர்
சென்னை: வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும் மையங்களில் அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள் 24 மணி நேரமும் தங்கலாம் என தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
கட்சி ஏஜெண்டுகள் 24 மணி நேரமும் தங்கலாம்: தலைமைத் தேர்தல் அலுவலர்
வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மையங்களில் அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள் விரும்பினால், 24 மணி நேரமும் தங்கலாம். 4 தொகுதிகளின் இடைத்தேர்தல் பாதுகாப்புக்காக 13 கம்பெனி துணை ராணுவ படையினர் வர உள்ளனர்” என்றார்.