சென்னை:‘பூவுலகின் நண்பர்கள்’ என்பது அனைத்து வர்க்க மக்களுக்கும் சுற்றுச்சூழல்நீதி கிடைக்கச் செய்வது உள்ளிட்ட பல அடிப்படைகளை நோக்கமாகக் கொண்டுள்ள இயற்கைப் பாதுகாப்பு அமைப்பாகும்.
தமிழ்நாட்டில் நாளை தாக்கலாகும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய சூழலியல் அம்சங்கள் குறித்து ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு சார்பில் சில கோரிக்கைகள் நிரம்பிய பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
காலநிலை மாற்றம்: தமிழ்நாட்டில் காலநிலை மாற்றம், ஒருங்கிணைந்த நலத்துக்கான ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்: புதிதாகக் கட்டப்படும், திட்டமிடப்படும் அனைத்து அனல்மின் நிலைய கட்டுமானங்களையும் நிறுத்திவிட்டு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும்.
நீர் பாதுகாப்பு: மாநிலம் முழுக்க, அனைத்து நீர்நிலைகளையும் அவற்றின் முழு திறனை அடையும் அளவுக்கு சரிசெய்ய திட்டம் வகுக்க வேண்டும்.
பொதுப் போக்குவரத்து: பொதுப் போக்குவரத்து கட்டமைப்புகளில் அதிக அளவிலான முதலீடுகளைச் செய்ய வேண்டும்.