தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழக பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம் - தமிழக சட்டப்பேரவை

சென்னை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று தொடங்குகிறது.

tn

By

Published : Feb 11, 2019, 9:16 AM IST

2019-20-ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை கடந்த 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இதில், அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு நிதி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு நிதி என பல்வேறு விஷயங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பிப்.,11-ம் தேதி (இன்று) தொடங்கும் என அறிவித்து அவைத்தலைவர் தனபால் பேரவையை ஒத்திவைத்தார்.

அதன்படி தமிழக நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் தொடங்குகிறது. இன்று முதல் நாளை மறுதினம் (பிப் 13) வரை நடைபெற இருக்கும் விவாதத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேச இருக்கிறார்கள்.

இதனையடுத்து வரும் 14-ம் தேதி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விவாதத்தின் மீது பதிலளித்து பேச இருக்கிறார். இதில், விவசாயிகள் பிரச்னை, கஜா புயல் பாதிப்பு, ஆசிரியர்கள் போராட்டம் என பல விவகாரங்களை எதிர்க்கட்சியினர் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details