தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 14, 2020, 12:13 PM IST

ETV Bharat / city

தமிழ்நாடு பட்ஜெட் 2020: புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் விரைவாக அமைக்கப்படும் எனவும், அதற்கா சுமார் ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் 2020-21ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

OPS
OPS

2020-21ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அதில், சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு குறித்து பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”வரும் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் சுகாதார துறைக்கு 16 ஆயிரத்து 863.37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அமையவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அரசு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதியதாக அரசு மருத்துவ கல்லூரிகளை 3 ஆயிரத்து 575 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரே ஆண்டில் நிறுவிட மத்திய அரசிடம் மாநில அரசு அனுமதி பெற்றுள்ளது. அத்துடன், அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை அரசு எடுத்துக்கொண்டு கடலூர் அரசு மருத்துவ கல்லூரி உருவாக்கப்படும் .

இயற்கை பேரிடர்களால் மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு தொகை ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும். விபத்துகளில் உயிரழந்தவர்களுக்கான நிவாரணத் தொகை ரூ.2 லட்சமாகவும், நிரந்தர ஊனமுற்றோருக்கான உதவித்தொகை ரூ. 4 லட்சமாகவும் உயர்த்தப்படும் என்றார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு பட்ஜெட் 2020: தமிழ்நாட்டின் வளர்ச்சி 7.2 விழுக்காடு!

ABOUT THE AUTHOR

...view details