தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உலக ஆணழகன் போட்டி: பதக்கங்களை குவித்த தமிழ்நாட்டு வீரர்கள்

சென்னை: தென்கொரியாவில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களுடன் நாடு திரும்பிய தமிழ்நாட்டு வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

TN body builders

By

Published : Nov 13, 2019, 9:57 AM IST

தென்கொரியாவில் நடைபெற்ற 'மிஸ்டர் வேர்ல்டு' ஆணழகன் போட்டியில் 37 நாடுகளைச் சேர்ந்த 376 வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் இந்தியா சார்பாக 53 பேர் பங்கேற்றனர். அதில் தமிழ்நாட்டிலிருந்து தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பாக அரசு தலைமையில் 14 பேர் கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் 55 கி, 65 கி, 75 கி, 85 கி, 90 கி, 100 கி, 100 கிலோவுக்கு மேல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் ஐந்து வெள்ளி, மூன்று வெண்கல பதக்கங்கள் என மொத்தமாக எட்டு பதக்கங்களை தமிழ்நாட்டு வீரர்கள் வென்றனர்.

இந்தப் போட்டியில் கலந்துகொண்ட அனைவரும் இன்று சென்னை திரும்பினர். அப்போது வெற்றி பதக்கங்களுடன் வந்த வீரர்களுக்கு அவர்களது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் மலர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வீரர்கள், தங்களுக்கு அரசு உதவிகள், ஸ்பான்சர் கிடைத்தால் பெரும் உதவியாக இருக்கும் மேலும் தீவிர பயிற்சி பெற்று சாதனை செய்வோம் என்றும் பாடிபில்டர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கைவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details