இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் நேற்று (ஏப்ரல் 30) இலங்கைக்கு சென்றுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய பாஜக கட்சியின் சார்பில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
அந்த வகையில் கொழும்புக்கு சென்ற அவர், அங்கிருந்து நேற்று மாலை நுவரெலியாவிற்கு தனது விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். அங்கு சென்ற அவரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் அவரின் குழுவினர் வரவேற்றுள்ளனர்.