தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சட்டப்பேரவையில் 2015 சென்னை வெள்ளம் குறித்து காரசார விவாதம் - சட்டப்பேரவை

2015ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்படக் காரணம் என்ன என்பது குறித்து சட்டப்பேரவையில் இன்று திமுக உறுப்பினர் நந்தகுமார், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவை விவாதம்
தமிழ்நாடு சட்டப்பேரவை விவாதம்

By

Published : Aug 23, 2021, 4:46 PM IST

சென்னை: இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 2015 சென்னை வெள்ளம் குறித்து விவாதம் நடைபெற்றது.

அந்த விவாதத்தில்,

திமுக உறுப்பினர் நந்தகுமார் - அதிமுக ஆட்சியின் போது கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததே 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்கு காரணமாக அமைந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் - சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி மட்டுமல்லாது, அதற்குக் கீழ் நூறு ஏரிகள் இருக்கின்றன. அந்த ஏரிகள் நிரம்பியதால் தான் நீர் வெளியேறியது.

திமுக உறுப்பினர் நந்தகுமார் - உரிய நேரத்தில் திறந்து விடப்படாததால் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து நீர் வெளியேறியது.

எதிர்க்கட்சித்தலைவர் - செம்பரம்பாக்கம் ஏரி உடையவில்லை, அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

காங்கிரஸ் உறுப்பினர் செல்வப் பெருந்தகை - செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க நான்கு நாட்களாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் முதலமைச்சர் உத்தரவுக்காக காத்திருந்தனர். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரே நாளில் அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் - அணைகளோ, ஏரிகளோ நிரம்பும்போது திறந்து விடுவது வழக்கமான நடைமுறைதான். முதலமைச்சரின் உத்தரவுக்காக காத்திருக்கவில்லை.

சென்னை வெள்ளம்

கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டதற்குக் காரணம் மனிதனால் ஏற்படுத்தப்பட்டது என்று மத்திய கணக்குத்தணிக்கையாளர் (CAG - Comptroller and Auditor General of India) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 1, 2015ஆம் ஆண்டு தேதி முதல் அடுத்த நாள் வரை 29 ஆயிரம் கனஅடி நீரை, அதுவும் வெறும் 21 மணி நேரத்தில் வெளியேற்றியிருக்கிறார்கள். பொதுவாக 21ஆயிரம் கனஅடிதான் வெளியேற்ற வேண்டும்.

ஆனால், இவர்கள் 29 ஆயிரம் கனஅடி நீரை திறந்துள்ளார்கள் என்றால், இது மனிதனால் ஏற்படுத்தப் பேரிடர் ஆகும் எனக் கூறிய மத்திய கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India - CAG) 127 பக்க அறிக்கையை வெளியிட்டிருந்தது.

ABOUT THE AUTHOR

...view details